"நான் என் சீடர்களிடம் கூறினேன், "கிருஷ்ணர் இங்கிருக்கிறார். அவர்தான் முழு முதற் கடவுள். சும்மா சரணடையுங்கள், மற்றும் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்," அவர்களும் அதைச் செய்கிறார்கள். அதில் சிரமம் ஒன்றும் இல்லை, வெறுமனே நீங்கள் அதில் உள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் வேதத்தின் அதிகாரம். நீங்கள் அதை விளக்க ஆரம்பித்தவுடனே, நீங்கள் உடனடியாக போக்கிரியாகிறீர்கள். பிறகு அதில் விளைவுகள் இல்லை. எவ்வாறு என்றால், ஒரு மருத்துவர் கூறுகிறார்: "இந்த மருந்தை இவ்விதமான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்," மேலும் நீங்கள் "இல்லை, என்னை வேறு ஏதோ ஒன்று சேர்க்க அனுமதியுங்கள்," என்று கூறினால் அது பயனுள்ளதாக இருக்காது. அதே வழி தான், நான் முன்பு கூறியது போல், நீங்கள் உப்பை அந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது, நீங்கள் குறைவாக எடுத்துக் கொள்ள கூடாது. இதுதான் வேத அறிவு. ஒரு வார்த்தையை கூட விளக்கக் கூடாது. அதில் உள்ளபடி அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும்; பிறகு அது பயனுள்ளதாக இருக்கும். மேலும் அது நடைமுறையில் செயல்படுத்தப்படுகிறது. நான் அதை கலப்படமாக்காமல், மேலும் அது பயனுள்ளதாக அமைய மிகவும் கவனமாக இருக்கிறேன்."
|