"நான் என் சீடர்களிடம் கூறினேன், "இதோ இருக்கிறார் கிருஷ்ணர். அவர்தான் முழு முதற் கடவுள். சும்மா சரணடையுங்கள், மேலும் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்," அவர்களும் அதைச் செய்கிறார்கள். அதில் எவ்வித சிரமமும் இல்லை, நீங்கள் வெறுமனே அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வேதத்தின் அதிகாரம். நீங்கள் அதை விளக்க ஆரம்பித்தவுடனே, நீங்கள் போக்கிரியாகிறீர்கள், உடனடியாக. பிறகு அதில் விளைவுகள் இல்லை. எவ்வாறு என்றால் ஒரு மருத்துவர் இவ்வாறு கூறினால்: "இந்த மருந்தை இந்த அளவில் எடுத்துக் கொள்," மேலும் நீங்கள் கூறினால்: "இல்லை, என்னை ஏதாவது சேர்க்க அனுமதியுங்கள்," அது பயனுள்ளதாக இருக்காது. அதே முறைதான், நான் ஏற்கனவே சொன்னது போல், நீங்கள் உப்பை ஒரு அளவில் எடுக்க வேண்டும். நீங்கள் அதிகமாக அல்லது குறைவாக எடுக்க கூடாது. இது வேத அறிவு. ஒரு வார்த்தைக் கூட விளக்கக் கூடாது. அதை உண்மையுருவில் ஏற்றுக் கொள்ள வேண்டும்; அப்போதுதான் அது பயனுள்ளதாக இருக்கும். மேலும் அது நடைமுறையில் நடத்தப்படுகிறது. அதை கலப்படமாக்காமல் இருப்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன், மேலும் அதனால் அது பயனுள்ளதாக இருக்கிறது."
|