"எனவே பகவான் சைதன்ய க்ருʼஷ்ண ஸங்கீர்தன போதித்தார், மேலும் அனைத்து இந்தியர்களுக்கும் கட்டளையிட்டார். அது ஒவ்வொரு இந்தியர்களின் கடமையாகும். நாம் ஒரு இந்தியனாக இருக்க, இந்தியாவின் புனித நிலத்தில் பிறவி எடுக்க மிகவும் பெருமைபட வேண்டும். சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், பாரத-பூமிதே மனுஷ்ய-ஜன்ம ஹைல யார (சி.சி. அதி 9.41): "பரத-வர்ஷ, என்னும் இந்த புனித நிலத்தில் பிறவி எடுத்திருகும் யாரேனும்," ஜன்ம ஸார்தக கரி(அ), "சும்மா உங்கள் வாழ்க்கையை நிறைவாக்கி மேலும் உலகமெங்கும் அந்த அறிவை விநியோகம் செய்யுங்கள். ஜன்ம ஸார்தக கரி கர பர-உபகார. பர-உபகார. இந்தியா என்பதன் நோக்கம் உலகத்திற்கு நலன்புரியும் நடவடிக்கைகளை செய்வதற்கே, ஆனால் நாம் அதை மறந்துவிட்டோம். நாம் மேற்கத்திய நாட்டை மேலும் தொழில்நுட்பத்தை பின்பற்ற முயற்சி செய்கின்றோம், மற்றும் நம் வேத பொக்கிஷ இல்லம், நம் நித்தியமான அறிவு பொக்கிஷ இல்லம் அனைத்தையும் வெளியே எறிந்துவிட்டோம்."
|