TA/711110d சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நாம் புரிந்துக் கொள்ள, பகவானை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், நாம் அவருடைய பக்தனாக வேண்டும். பக்தன் என்றால் சேவகன்—ஊதியம் பெற்ற சேவகன் அல்ல, ஆனால் பாசம் நிறைந்த சேவகன். எவ்வாறு என்றால், இந்த சிறுவர்கள், ஐரோப்பிய சிறுவர்கள், அமெரிக்க சிறுவர்கள், மேலும் சில பிலிபின் சிறுவர்கள், அவர்கள் எனக்கு சேவை செய்ய முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்கள் ஊதியம் பெற்ற சேவகன் அல்ல, ஆனால் பாசம் நிறைந்த சேவகன். தாயும் தந்தையும் மகனுக்கு சேவகனாவது போல். அந்த மகன், சிறு குழந்தை, மலம் கழித்தவுடன், தாய் அதை சுத்தம் செய்கிறாள். அதனால் தாய் துப்புரவு செய்பவராகிவிட்டார் என்று பொருள்படாது. தாய், தாயார் தான், ஆனால் பாசத்தால் அவள் தொண்டு செய்கிறாள். அதேபோல், நாம் பகவானுக்கு பாசத்தால், நேசத்துடன் சேவை அளிக்கும் போது, பிறகு பகவான் வெளிப்படுகிறார்: அத꞉ ஷ்ரீ-க்ருʼஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை꞉ (சி.சி. மத்ய 17.136)."
711110 - சொற்பொழிவு BG 04.01 - டெல்லி