"நீங்கள் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், பிறகு படிப்படியாக, ஒவ்வொன்றாக போகவேண்டும். முதலில் பகவத் கீதையை படியுங்கள், புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், மேலும் கிருஷ்ணர் கூறியது போல், கிருஷ்ணரிடம் சரணடையுங்கள் பிறகு நீங்கள் நுழையலாம். எவ்வாறென்றால் நீங்கள் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றப் பிறகு கல்லூரிக்குள் நுழைவது போல. அதேபோல், நீங்கள் கிருஷ்ணரை அனைத்தும் அவரே என்று ஏற்றுக் கொள்ளும் தகுதி பெற்றதும், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஷரணம் (ப.கீ 18.66), பிறகு நீங்கள் பாகவதகுள் நுழைவீர்கள்."
|