"இந்த இயக்கம் மக்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண உதவி செய்கிறது. ஏனென்றால் நாம் சரியாக புரிந்துக் கொள்ளாததால் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றோம், ஒரு முட்டாள் சட்டம் என்றால் என்னவென்று அறிந்துக் கொள்ளாதது போல். அவன் எதையோ திருடிவிட்டு, மேலும் அவன் நீதிமன்றத்திற்கு கைதி செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் போது அவன் கூறுகிறான் அதாவது, "திருடர் தண்டிக்கப்பட ஒரு சட்டம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை." அல்லது திருடுவது சட்டத்திற்கு எதிரானது, குற்றமாகும். எனவே அறியாமைக்கு மன்னிப்பு இல்லை, அதேபோல், முட்டாள்தனத்தால், நாம் பல பாவம் நிறைந்த வாழ்க்கைகளை ஏற்படுத்துகின்றோம் மேலும் தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றோம், அதுதான் இயற்கையின் சட்டம்."
|