TA/720218 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விசாகப்பட்டினம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் கிருஷ்ணருடைய பங்கும் பகுதிகளும் என்பதால் கிருஷ்ணருடன் நாம் நித்திய உறவை கொண்டுள்ளோம். இது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலுள்ள நித்தியமான உறவை போன்றது. ஒரு மகன் தந்தைக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருக்கலாம், ஆனாலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவு முறிக்கப்பட முடியாதது. இதை போலவே நாமும் கிருஷ்ணருடம் உறவு கொண்டுள்ளோம். எப்படியோ நாம் அதனை மறந்துவிட்டுள்ளோம். அதுவே நமது தற்போதைய நிலை. இதுவே மாயை எனப்படுகிறது. மாயை என்றால் கிருஷ்ணருடனான நமது உறவை மறந்துவிட்டு ஏகப்பட்ட போலியான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதாகும். தற்போது நான் என்னை இந்தியன் என்று நினைக்கிறேன், இன்னுமொருவர் தன்னை அமெரிக்கன் என்று நினைக்கிறார், வேறொருவர் தன்னை இந்து என்று நினைக்கிறார், மேலும் ஒருவர் தன்னை முஸ்லிம் என்று நினைக்கிறார். இல்வெல்லா உறவுகளும் போலியானவையே, மாயை."
720218 - சொற்பொழிவு - விசாகப்பட்டினம்