"கிருஷ்ணருக்கும் நமக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்னவெனில், இப்போது நான் ஒரு அழகான மலரை வரைகின்றேன் என வைத்துக் கொள்வோம்: அதற்கு தூரிகை வேண்டும், நிறச்சாயம் வேண்டும், புத்திசாலித்தனம் வேண்டும், நேரம் வேண்டும், அப்போது, எப்படியாவது, சில நாட்களிலோ சில மாதங்களிலோ ஒரு வண்ணமயமான பழத்தையோ மலரையோ வரைந்துவிடுவேன். ஆனால், கிருஷ்ணருடைய சக்தி மிக்க அனுபவம் வாய்ந்தது, தன்னுடைய சக்தியை பாவிப்பதால், பல கோடிக்கணக்கான வண்ணமயமான மலர்கள் ஒரே நேரத்தில் வருகின்றன. முட்டாள் விஞ்ஞானிகளோ, அது இயற்கையின் செயல் என்கின்றனர். இல்லை, இயற்கை கருவியாகிறது. இயற்கையின் பின்னால் இறைவனின், கிருஷ்ணரின் மூளை இருக்கிறது. இதுவே கிருஷ்ண உணர்வாகும்."
|