"பிரக்ருதிகள், கிருஷ்ணரின் வெவ்வேறு மனைவிகள், அநாவசியமாக ஆதிக்கம் செலுத்துபவராக மாற கஷ்டப்படுகின்றனர். இந்த பௌதிக உலகத்தில், ஒவ்வொருவரும் ஆதிக்கம் செலுத்துபவராக மாற முயல்கின்றனர். ஒரு தேசம் மற்றைய தேசங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக மாற முயல்கின்றது. ஒருவன் மற்றையவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவனாக மாற முயல்கின்றான். ஒரு சகோதரன் மற்றைய சகோதரனின் மீது ஆதிக்கம் செலுத்துபவனாக மாற முயல்கின்றான். இது மாயை ஆகும். எனவே, ஒவ்வொருவரும் ஆதிக்கம் செலுத்தும் மனோபாவத்தைக் கைவிட வேண்டும். முழுமுதற் கடவுளால் ஆதிக்கம் செலுத்தப்பட மனமுவந்து சரணடைய வேண்டும். அது அமைதியைத் தரும்."
|