"பிரம்மத்தை உணர்ந்த ஆத்மாவுக்கு, இனி ஏக்கமோ புலம்பலோ கிடையாது. உடலின் தளத்தில் இருக்கும்வரை நாம் ஏங்குகின்றோம், புலம்புகின்றோம். இல்லாதவற்றிற்காக ஏங்குகின்றோம், இழந்தவற்றிற்காக புலம்புகின்றோம். இரண்டு வேலைகள்: சில ஜட இலாபங்களை பெறுவது அல்லது இழப்பது. இது உடலின் தளம். ஆனால், ஆன்மீகத் தளத்திற்கு வரும்போது, இழப்பா இலாபமா என்ற கேள்விக்கே இடமில்லை. சமநிலை. ப்ரஹ்ம-பூத꞉ ப்ரஸன்னாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி, ஸம꞉ ஸர்வேஷு பூதேஷு. அவனுக்கு இனி ஏக்கமோ புலம்பலோ கிடையாது என்பதால், இனி எதிரிகளும் அவனுக்கு இருப்பதில்லை. ஏனேன்றால் எதிரிகள் இருந்தால், புலம்பல் இருக்கும், ஆனால் எதிரிகள் இல்லையென்றால், ஸம꞉ ஸர்வேஷு பூதேஷு மத்-பக்திம் லபதே பராம். அதுவே திவ்யமான செயற்பாடுகளின் ஆரம்பம். பக்தி."
|