TA/720222 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விசாகப்பட்டினம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“இந்து மதமோ கிறிஸ்தவ மதமோ முஸ்லிம் மதமோ. இறுதி இலக்கு என்ன? இறையன்பு, இயேசு கிறிஸ்துவும் எப்படி கடவுளை நேசிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். முகமதிய மதமும் முழுமுதற் கடவுளை உணரும்படி பிரச்சாரம் செய்கிறது, அல்லாஹு அக்பர். புத்த மதத்தினர் பெரும்பாலும் நாத்திகர்களாக இருந்தாலும் பகவான் புத்தர் கிருஷ்ணரின் அவதாரமாவார், எனவே ஸ்ரீமத் பாகவதத்தில் கடவுள், கிருஷ்ணர் நாத்திகர்களை ஏமாற்ற புத்த பகவானாக அவதரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. நாத்திக வகுப்பினர் கடவுளை நம்பவில்லை, ஆனால் பகவான் புத்தர் அவர்கள் முன் தோன்றி, ‘ஆம், கடவுள் இல்லை, அது சரியே, ஆனால் நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றார். எனவே நாத்திக வகுப்பினர் அதனை ஏற்றுக்கொண்டு, ‘ஆம் நீங்கள் என்ன சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்கிறோம்’ என்றனர். ஆனால் நாத்திகர்களுக்கு அவர் கடவுளின் அவதாரம் என்று தெரிந்திருக்கவில்லை.”
720222 - சொற்பொழிவு to Railway Workers - விசாகப்பட்டினம்