“நாம் ஜட இயற்கையின் சட்டங்களின் பிடியில் இருக்கிறோம், நமது கர்மத்தின்படி வெவ்வேறு வகையான உடல்களை பெற்று ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு மாறுகிறோம். நாம் பிறந்தவுடன் சில காலம் வாழ்கிறோம், உடலை வளர்க்கிறோம், சில உப விளைவுகளை உற்பத்தி செய்கிறோம், பிறகு உடல் தளர்ந்துவிடுகிறது, இறுதியாக அது மறைந்து விடுகிறது. அது மறைந்து விடுகிறது என்பதன் அர்த்தம் இன்னொரு உடலை ஏற்கிறோம் என்பதாகும். மீண்டும் உடல் வளர்கிறது, உடல் தங்கிருக்கிறது, உடல் பக்க விளைவுகளை உற்பத்தி செய்கிறது, மீண்டும் தளர்வடைகிறது, மீண்டும் மறைந்து விடுகிறது. இப்படியாக நடந்து கொண்டிருக்கிறது.”
|