TA/720312 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: அங்கே ஒரு புத்தகம் இருக்கிறது, ஒருவேளை நீங்கள் படித்திருப்பீர்கள், அஃகுரியன் கோஸ்பேல். எனவே அந்த புத்தகத்தில் நான் ஒரு கிரேக்க வார்த்தை படித்தேன், கிறிஸ்தோ. கிறிஸ்தோ... சில நேரங்களில் நாம் கிருஷ்ணா என்று சொல்லமாட்டோம், நாம் க்ருʼஷ்ட என்று சொல்வோம்.

டாக்டர் கபூர்: க்ருʼஷ்ட, ஆம், குறிப்பாக வங்காளத்தில். பிரபுபாதர்: ஆம், எனவே இந்த கிறிஸ்தோ வார்த்தை என்றால் 'அபிஷேகம்' என்று பொருள்படும். கிருஷ்ணரின் முகம் 'அபிஷேகம்' செய்யப்பட்டுள்ளது. மேலும் 'அன்பு' நிறைந்தது. மற்றும் இந்த 'கிறிஸ்து' என்னும் தலைப்பு ஜிஸஸுக்கு அவர் பகவானின் மீது வைத்திருந்த அன்பின் காரணத்தால் அளிக்கப்பட்டது. எனவே, மொத்தத்தில், இதன் முடிவுரை யாதெனில், கிருஷ்ணா அல்லது கிறிஸ்தோ என்றால் 'பகவானின் அன்பு'"

720312 - உரையாடல் - விருந்தாவனம்