“நாம் நித்தியமான பங்கும் பகுதிகளுமான சேவகர்கள் ஆவோம், உடலின் அனைத்து பின்னப்பகுதிகளும் நமது சேவகர்களாக இருப்பதை போன்று. விரல் உடலின் பங்கும் பகுதியும் ஆகும், அது எப்பொழுதும் முழுமைக்கு சேவை செய்கின்றது. அதுதான் வேலை. விரல் அனுபவிப்பாளர் அன்று, அல்லது கை அனுபவிப்பாளர் அன்று; வயிறுதான் அனுபவிப்பாளர். விரல்களாலும் கையாலும் உணவை எடுத்து இங்கே கொடுக்கிறோம். நம்மால் எடுத்துக் கொள்ள முடியாது. அது துஷ்பிரயோகம். இதேபோல, தாஸ்யம் கதானாம்: இஃது உண்மையான தன்னுணர்வாகும், அதாவது ‘நான் பங்கும் பகுதியும் ஆவேன்’, மமைவாம்ஷோ ஜீவ-பூத (BG 15.7). ஒருவன் பின்னப்பகுதியின் கடமை என்னவென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.”
|