"ஆன்மீக உலகில் தாழ்வான சக்தியின் காட்சி இல்லை; அங்கே அந்த மேலான சக்தி மட்டுமே உள்ளது, சேதன, சித்ய-வத்(?). ஆகையினால் ஆன்மீக உலகம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் உலகம் என்று அழைக்கப்படுகிறது. அங்கே இந்த சேதன, அல்லது உயிரற்ற விரிவாக்கம் இல்லை. அங்கேயும் நமக்கு இருப்பது போல் பலவகைகள் உள்ளது. அங்கே தண்ணீர், மரங்கள், நிலமும் உள்ளது. நிர்விஸெஸ அல்ல, தனித்தன்மை இல்லை—அனைத்தும் அங்கே இருக்கிறது—ஆனால் அவை அனைத்தும் மேலான சக்தியால் ஆனது. அது இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது அதாவது யமுனை நதி தன் அலைகளுடன் ஓடுகிறது, ஆனால் கிருஷ்ணர் யமுனை ஆற்றின் கரைக்கு வந்ததும், கிருஷ்ணரின் புல்லாங்குழலின் ஓசையை கேட்க அலைகள் நின்றுவிடும்."
|