"நரோத்தம தாஸ டாகுர ஒரு நல்ல பாடல் பாடியுள்ளார்: தேஹ-ஸ்ம்ருʼதி நாஹி யார ஸம்ʼஸார-பந்தன காஹாங் தார: "இந்த உடல் சம்மந்தமான வாழ்க்கை நிலையில் இருந்து விடுபட்டுவிட்ட ஒருவர், அவர் இனிமேலும் கட்டுண்டவர் அல்ல. அவர் விடுதலை பெற்றவராகிவிடுகிறார்," தேஹ-ஸ்ம்ருʼதி நாஹி யார. இது சாத்தியமே. இது சாத்தியமே. இதற்கு அளிக்கப்பட்ட உதாரணம் ஒரு தேங்காயைப் போல்: தேங்காய் பச்சையாக இருக்கும் பொழுது, அனைத்தும் சேர்ந்திருக்கும், ஆனால் அது காய்ந்தவுடன், அதை ஆட்டினால், நீங்கள் ஒரு சத்தம் கேட்கலாம், க்ர்த்-க்ர்த், க்ர்த்-க்ர்த். அப்படியென்றால் தேங்காய்குள் இருக்கும் ஓடு, தென்னை நாரிலிருந்து பிரிந்துவிட்டது. தென்னை நாரிலிருந்து பிரிந்துவிட்டது. இது சாத்தியமே. அதேபோல், இந்த ஜட உடலில் இருப்பினும், நீங்கள் பக்தி யோகாவின் கொள்கைகளை பின்பற்றினால், வாஸுதேவே பகவதி—வாஸுதேவரின் வழி வந்த பக்தி யோகா, வேறு எந்த விதத்திலும் வந்த பக்தி யோகா அல்ல—வாஸுதேவே பகவதி பக்தி-யோக꞉ ப்ரயோஜித꞉— பிறகு நீங்கள் படிப்படியாக, பிரிக்கப்படுவீர்கள்."
|