TA/720403 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சிட்னி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உலகம் எங்கிலும் மிகவும் அதிகமான சிரமங்கள் இருக்கின்றன, ஏனென்றால் நாம் இந்த உடலால் தவறாக அடையாளம் கொண்டிருக்கிறோம், இது வெறுமனே சட்டையும் மேற்சட்டையும் ஆகும். நாம் உட்கார்ந்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம், பல பெண்கள் மேலும் நற்பண்புகள் கொண்ட ஆடவர்கள், நாம் வெறுமனே ஆடைகளின் அடிப்படையில் சண்டை போட்டுக் கொண்டால், "ஓ, நீ அந்த உடையில் இல்லை. நான் அந்த உடையில் இருக்கிறேன். ஆகையினால் நீ என் எதிரி," இது ஒரு நல்ல வாக்குவாதம் அல்ல. நான் வேறுபட்ட உடையில் இருப்பதால், நான் உங்கள் எதிரி அல்ல. மேலும் நீங்கள் வேறுபட்ட உடையில் இருப்பதால், நீங்கள் எதிரி அல்ல. ஆனால் அது நடந்துக் கொண்டிருக்கிறது. அது நடந்துக் கொண்டிருக்கிறது. "நான் அமெரிக்கன்," "நான் இந்தியன்," "நான் சீனர்," "நான் ரஷ்யன்," "நான் இது," "நான் அது." மேலும் இதை குறிவைத்து தான் சண்டை நடந்துக் கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் கிருஷ்ண உணர்வில் சேர்ந்துக் கொண்டால், இந்த அயோக்கியத்தனம் சென்றுவிடும். இதைப் போல், அனைத்து மாணவர்களும், நீங்கள் பாருங்கள். தாங்கள் இந்தியர்கள் அல்லது அமெரிக்கர் அல்லது ஆப்பிரிக்கன் அல்லது .... என்று அவர்கள் நினைப்பதில்லை. இல்லை. அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் "நாம் கிருஷ்ணரின் வேலைக்காரர்கள்." அது தான் தேவை."
720403 - சொற்பொழிவு SB 01.02.05 - சிட்னி