"இந்த நிலைமை, மூலப்பொருளுடன் நம் தொடர்பு, ஒரு கனவு போன்றது. உண்மையில் நாம் விழவில்லை. ஆகையினால், நாம் விழவில்லை என்பதால், எந்த நேரத்திலும் நம் கிருஷ்ண உணர்வை நாம் புதுப்பிக்கலாம். நாம் இதைப் புரிந்துக் கொண்ட உடனே அதாவது 'எனக்கு இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. நான் வெறுமனே கிருஷ்ணரின் வேலைக்காரன், நித்தியமான வேலைக்காரன். அவ்வளவுதான்', உடனடியாக அவன் விடுதலை அடைகிறான். சரியாக அதைப் போல்: நீங்கள் உடனடியாக... சில நேரங்களில் நாம் அதைச் செய்வோம். பயங்கரமான கனவு மிக அதிகமாக சகிக்க முடியாத நிலையை அடையும் போது, நாம் அந்த கனவை கலைத்துவிடுவோம். நாம் அந்த கனவை கலைத்துவிடுவோம்; இல்லையென்றால் அது சகிக்க முடியாமலாகிவிடும். அதேபோல், நாம் இந்த பௌதிக இணைப்பை எந்த நேரத்திலும் உடைத்துவிடலாம், கிருஷ்ண உணர்வு என்னும் குறிக்கோளுக்கு வந்தவுடன்: 'ஓ, கிருஷ்ணர் என்னுடைய நித்தியமான எஜமானர். நான் அவருடைய வேலைக்காரன்'. அவ்வளவுதான். இதுதான் முறை. உண்மையில் நாம் விழவில்லை. அங்கே எத்தகைய வீழ்ச்சியும் இருக்க முடியாது. அதே உதாரணம்: உண்மையில் அங்கே புலி இல்லை; அது கனவு. அதேபோல், நம்முடைய விழுந்த நிலையும் கனவுதான். நாம் விழவில்லை. நாம் வெறுமனே அந்த மாயையான நிலையை எந்த நேரத்திலும் விட்டுவிடலாம்."
|