TA/720425 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டோக்கியோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இன்று காலை நான் கிருஷ்ணரின் நடவடிக்கைகளைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்து சூரிய உதயத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் எழுந்துவிடுவார். அவருடைய மனைவிமார்கள் வெறுப்படைந்தனர். சேவல் கூவியவுடனே, 'ககா-கோ!' கிருஷ்ணர் உடனடியாக...(சிரிப்பொலி) அதுதான் எச்சரிக்கை. அதுதான் எச்சரிக்கை, இயற்கையின் எச்சரிக்கை. எச்சரிக்கை மணி தேவையில்லை. மேலும் எச்சரிக்கை மணி ஓடிக் கொண்டிருக்கும், ஆனால் அவன் நிசப்தமாக தூங்கிக் கொண்டிருப்பான். (சிரிப்பொலி) மேலும் ஒருவேளை அவன் எழுந்தால், உடனடியாக அதை நிறுத்திவிடுவான் அது தொந்தரவாக இருக்கும்..., அது தொந்தரவாக இருக்கக் கூடாது என்று. ஆனால் அங்கே இயற்கையின் எச்சரிக்கை மணி இருக்கிறது, அந்த சேவல் மூன்று மணிக்கு கூவிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ப... மேலும் கிருஷ்ணர் உடனடியாக எழுந்துவிடுவார். அவர் தன்னுடைய அழகான ராணிமார்களுடன் தூங்கிக் கொண்டிருந்தாலும்... ராணிமார்கள் வெறுப்படைந்தனர். அவர்கள் கூவிக் கொண்டிருக்கும் சேவலை சபித்தனர், 'இப்பொழுது கிருஷ்ணர் சென்றுவிடுவார். கிருஷ்ணர் சென்றுவிடுவார்'. ஆனால் கிருஷ்ணர், விடியற்காலையில் எழுவதை வழக்கமாக கொண்டவர். நீங்கள் கிருஷ்ணரின் நடவடிக்கைகளைப் பற்றி நம் கிருஷ்ணா புத்தகத்தில் படியுங்கள்."
720425 - சொற்பொழிவு SB 02.09.01-8 - டோக்கியோ