"வைகுண்ட கிரகத்தில், அங்கே மிகவும் உயர்ந்த, மரியாதைக்குரிய உணர்வு இருக்கிறது, 'பகவான் இங்கிருக்கிறார்'. ஆனால் வ்ருʼந்தாவனத்தில், மரியாதைக்குரிய உணர்வு இல்லை, கிருஷ்ணரும் மாட்டிடைய சிறுவர்களும், கோபிமார்களும், ஆனால் அவர்களுடைய அன்பு மிக, மிக தீவிரமானது. அன்பின் காரணத்தால், அவர்களால் கிருஷ்ணரை புறக்கணிக்க முடியவில்லை. இங்கு வைகுண்ட கிரகத்தில், மரியாதைக் காரணத்தால், அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. வ்ருʼந்தாவனத்தில், கோலோக வ்ருʼந்தாவனத்தில், அவர்களால் கிருஷ்ணரிடம் எதையும் மறுத்து கூறுவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, கிருஷ்ணர் மிகவும் அன்பிற்குரியவர். அவர்கள் எதையும் கொடுப்பார்கள். அங்கே அவ்வளவு மரியாதை இல்லை, ஏனென்றால் அவர்களுக்கு கிருஷ்ணர் பகவானா இல்லையா என்று தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்தது, 'கிருஷ்ணர் நம்மைப் போன்றவர், நம்மில் ஒருவர்'. ஆனால் அவர்களுடைய மரியாதையும், மேலும் அன்பும் மிகவும் தீவிரமானது, அதாவது கிருஷ்ணர் இல்லாமல் அவர்கள் உயிரற்றவர்களாகிறார்கள். அங்கே வாழ்க்கையே இல்லை."
|