"ஜிபிசி உறுப்பினர் என்றால், அனைத்து கோவிலும் இந்த புத்தகங்களை முற்றுலும் படித்து மேலும் விவாதிக்கப்பட்டு மற்றும் புரிந்துக் கொள்ளப்பட்டு, அத்துடன் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படுகிறதா என்று கவனிப்பார்கள். அதுதான் தேவைப்படுகிறது. வெறுமனெ இரசீதுகளை மட்டும் பார்க்க அல்ல, "நீ எத்தனை புத்தகம் விற்று இருக்கிறாய், எத்தனை புத்தகம் கையிருப்பில் இருக்கிறது?" அது இரண்டாம் பட்சம். நீ இரசீதுகளை வைத்துக் கொள்ளலாம்... ஒருவர் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபட்டிருக்கும் போது, இரசீதுகள் தேவையில்லை. அது... அனைவரும் அவர்களால் முடிந்தவரை சிறப்பாக செய்கிறார்கள். அவ்வளவுதான். எனவே காரியங்கள் நன்றாக செயல்படுகின்றனவா என்று நாம் கவனிக்க வேண்டும். ஆக இம்முறையில் ஜிபிசி உறுப்பினர்கள் சில மண்டலங்களை பிரித்து கொண்டு, காரியங்கள் சரியாக நடைபெறுகின்றனவா என்று கவனிக்க வேண்டும், அவர்கள் பதினாறு சுற்று உச்சாடனம் செய்கிறார்களா, கோவில் நிர்வாகம் வழக்கமான முறையில் செயல்படுகிறதா, மேலும் புத்தகங்கள் முற்றுலும் படித்து மேலும் விவாதிக்கப்பட்டு மற்றும் புரிந்துக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று நன்றாக கவனிக்க வேனடும். இந்த விஷயங்கள் தான் தேவைப்படுகிறது."
|