"'என் அன்பு பகவானே, நான் எனக்காக கவலைப்படவில்லை, ஏனென்றால் அந்த பொருள் என்னிடம் உள்ளது. அறியாமையை எவ்வாறு கடப்பதென்றோ அல்லது எவ்வாறு வைகுண்டத்திற்கு செல்வது அல்லது எவ்வாறு முக்தியடைவது என்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டது.' ஏன்? அது உன்னால் எவ்வாறு தீர்க்கப்பட்டது? த்வத்-வீர்ய-காயன-மஹாம்ருʼத-மக்ன-சித்த꞉: 'ஏனென்றால் நான் எப்பொழுதும் உங்கள் செயல்களை மகிமைப்படுத்துவதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால், அதனால் என் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டது.' பிறகு உன் பிரச்சனை என்ன? பிரச்சனை என்னவென்றால் ஷோசே: 'நான் புலம்பிக் கொண்டிருக்கிறேன்', ஷோசே ததோ விமுக-சேதஸ꞉, 'உங்களிடம் வெறுப்பை காட்டிக் கொண்டிருப்பவர்கள். உங்களிடம் வெறுப்பை காட்டிக் கொண்டு, அவர்கள் மிகவும் கடினமாக வேலை செய்துக் கொண்டிருக்கிறார்கள்', மாயா-ஸுகாய, 'சந்தோஷம் என்று அழைக்கப்படுவதற்கு, இந்த போக்கிரிகள். எனவே நான் வெறுமனே அவர்களுக்காக புலம்பிக் கொண்டிருக்கிறேன்'. இதுதான் நம் வைஷ்ணவ தத்துவம். கிருஷ்ணரின் கமலப்பாதங்களில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு, அவனுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவனுடைய ஒரே பிரச்சனை, கிருஷ்ணரை மறந்துவிட்டு, வெறுமனே கடினமாக வேலை செய்துக் கொண்டிருக்கும், இந்த போக்கிரிகளுக்கு எவ்வாறு விடுதலை பெறச் செய்வது. அதுதான் பிரச்சனை."
|