"ஸ்ரீ பகவான் கூறினார். பகவான், முழு முதற் கடவுள், கிருஷ்ணர், அவர் அவதாரமாக, இறங்கி வருகிறார். ஷன்ஸ்க்ரித் வார்த்தை அவதார, அவதார என்றால் மேலே இருந்து இறங்கி வருபவர்; கீழே வந்துக் கொண்டிருப்பது, கீழே. அவர் ஏன் வருகிறார்? பரித்ராணாய ஸாதூனாம்ʼ விநாஷாய ச துஷ்க்ருʼதாம் (ப.கீ. 4.8). அங்கே இரண்டு வகையான மனிதற்கள் இருக்கிறார்கள்— ஒன்று சாது மேலும் மற்றொன்று தவறானவன். சாது என்றால் பகவானின் பக்தன், மேலும் தவறானவன் என்றால் எப்பொழுதும் பாவச் செயல்களை செய்துக் கொண்டிருப்பவன். அவ்வளவு தான். எனவே இந்த ஜட உலகில் நீங்கள் எங்கு சென்றாலும் அங்கே இரண்டு வகையான மனிதர்கள் இருப்பார்கள். ஒன்று தேவர் அல்லது பக்தன், மேலும் மற்றொன்று பக்தன் அல்லாதவன் அல்லது அசுரர் என்று அழைக்கப்படுகிறது. எனவே கிருஷ்ணர் வருகிறார்... இருவரும் கட்டுண்டவர்கள், ஒருவன் அசுரனாகிவிட்டான் மேலும் ஒருவன்... நிச்சயமாக உயர்ந்த நிலையில் இருக்கும் பக்தர், அவர் கட்டுண்டவர் அல்ல; அவர் முக்தா, இந்த வாழ்க்கையிலும் விடுதலை பெற்றவர். எனவே கிருஷ்ணர் கீழே வருகிறார், அவருக்கு இரண்டு வேலைகள் உள்ளன: பக்தர்களை மீட்டெடுக்க மேலும் பக்தர் அல்லாதவர்களை வெற்றிக் கொள்ள."
|