"அனைவருக்கும் அவர்களுடைய ஒரு குறிப்பிட்ட வகையான மதம் அல்லது தொழில் இருக்கிறது. அது பரவாயில்லை. தர்ம ஸ்வனுஷ்டித꞉ பும்ʼஸாம் (ஸ்ரீ.பா. 1.2.8). அதன் முடிவு... உங்கள் குறிப்பிட்ட மதத்தை செயல்படுத்துவதன் மூலம், அதன் முடிவு அங்கிருக்க வேண்டும். அதன் முடிவு யாதெனில், 'நான் எவ்வாறு வீடுபேறு அடைவது, பரமபதம் அடைவது'. அந்த ஆசை ஏற்படவில்லை என்றால், அது வெறுமனே நேர விரயம் தான். நீங்கள் இந்த மதம் அல்லது அந்த மதம் இந்த மதம் அல்லது அந்த மதம் என்று கூறலாம், அதனால் பரவாயில்லை. நீங்கள் கோட்பாடுகளை மேலும் சடங்குகள் இது அல்லது அது என்று பின்பற்றி வெறுமனே நேரத்தை விரயம் செய்கிறீர்கள். அது உங்களுக்கு உதவாது. பலேன பரிசீயதே. நீங்கள் இந்த உணர்வுக்கு வருகிறீர்களா, 'நான் யார்? நான் கருப் பொருள் அல்ல; நான் ஆன்மா. நான் மீண்டும் என் ஆன்மீகத்திற்குச் செல்ல வேண்டும்'. அது... அதுதான் வேண்டும். நீங்கள் ஹீப்ருவாக, அல்லது இந்துவாக அல்லது கிறிஸ்துவனாக இருக்கலாம்—அந்த உணர்வு எழுச்சி பெற்றதா என்று நாங்கள் பார்க்க வேண்டும். அது இல்லை என்றால், நீங்கள் வெறுமனே நேரத்தை விரயம் செய்துவிட்டீர்கள். நீங்கள் இந்துவாக அல்லது ப்ராஹ்மணவாக, இதுவாக அல்லது அதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ஷ்ரம ஏவ ஹி கேவலம் (ஸ்ரீ.பா. 1.2.8). வெறுமனே நேர விரயம்."
|