TA/720715 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நம் கருத்து யாதெனில், நாம் மாயாவுடன் போராடிக் கொண்டிருக்கிறோம், ஆகவே அந்த போராட்டம், நாம் உண்பது, உறங்குவது, பாதுகாத்துக் கொள்வது, இனச்சேர்க்கையில் ஈடுபடுவது ஆகியவற்றால் குழப்பம் அடையாமல் இருக்கும் போது நாம் மாயாவை வென்றுவிடுவோம். இதுதான் சோதனை. ஆன்மீகத்தில் எவ்வாறு முன்னேற்றம் அடைந்திருக்கிறான் என்று எவரும் யாரிடமிருந்தும் சான்றிதழ் பெற தேவையில்லை. அவன் தானே சோதித்துக் கொள்ளலாம்: "நான் இந்த நான்கையும் எவ்வாறு வெற்றிக் கொண்டிருக்கிறேன்: உண்பது, உறங்குவது, இனச்சேர்க்கை, பாதுகாத்துக் கொள்வது." அவ்வளவுதான். அதுதான் சோதனை. எனவே நீங்கள் உணவு உட்கொள்ளாமல், தூங்காமல் இருக்க..., ஆனால் குறைத்துக் கொள்ளுங்கள், குறைந்தபட்சம் அதை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். முயற்சி செய்யுங்கள். இதைத் தான் தபஸ்ய என்று அழைக்கின்றோம். எனக்கு தூக்கம் வருகிறது, இருப்பினும் நான் அதை ஒழுங்குபடுத்துகிறேன். நான் உட்கொள்ள வேண்டும் ஆனால் நான் அதை ஒழுங்குபடுத்து வேண்டும். எனக்கு புலன்களின் இன்பம் தேவைப்படுகிறது, எனவே நான் அதை ஒழுங்குபடுத்து வேண்டும். அதுதான் பழமையான வேதத்தின் நாகரீகம்."
720715 - சொற்பொழிவு SB 01.01.05 - இலண்டன்