TA/720731 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் க்ளஸ்கொவ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“கிருஷ்ணர் பூரண கவர்ச்சியுடையவர்; அதனால் அவரைப் பற்றிய கதையும் கவர்ச்சியுடையது. நமது கிருஷ்ணா புத்தகத்தில் கிருஷ்ணரை பற்றிய தலைப்புகள் பல உள்ளன, ஜன்ம கர்ம மே திவ்யம் (BG 4.9), அவரது பிறப்பு, அவரது உண்மை தந்தையின் வீட்டிலிருந்து இன்னொரு வளர்ப்பு தந்தையிடம் மாற்றப்பட்டமை, பிறகு கம்சன் போன்ற அசுரர்கள் கிருஷ்ணர் மீது தொடுத்த தாக்குதல்கள். இவ்வனைத்து செயல்கள் பற்றி, க்ருஷ்ண-ஸம்ப்ரஷ்ந꞉ பற்றி படித்தாலோ கேட்டாலோ முக்தி அடைந்து விடுவோம். கிருஷ்ணரை பற்றி கேட்பதாலேயே சந்தேகத்திற்கு இடமின்றி நமது முக்தி உறுதி செய்யப்படுகிறது. அதனால் கிருஷ்ணர் வருகை தருகிறார், ஏகப்பட்ட செயல்கள். ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம-பலே ஸ்ப்ருஹா (BG 4.14). கிருஷ்ணர், தான் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை என்று கூறுகிறார். அவருக்கு செய்வதற்கு என்ன உள்ளது? இருந்தாலும், அவர் பல அசுரர்களை வதம் செய்கிறார், பல பக்தர்களை காக்கிறார். ஏனென்றால் அவர் தர்மத்தின் கோட்பாடுகளை மீண்டும் நிலை நாட்டுவதற்காக வந்துள்ளார், அவர் தனது சொந்த செயல்களினால் நிலை நாட்டுகிறார்.”
720731 - சொற்பொழிவு SB 01.02.05 - க்ளஸ்கொவ்