TA/720801 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் க்ளஸ்கொவ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் எத்தகைய அறியாமையில் இருக்கின்றோம் என்று சும்மா புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எல்லோரும் அறியாமையில் இருக்கின்றோம். இந்த கல்வி தேவைப்படுகிறது ஏனென்றால் மக்கள், இந்த அறியாமையால், அவர்கள் ஒன்று மற்றொன்று என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் சண்டை போடுகிறது, ஒரு மதத்தைச் சேர்ந்தவன் மற்றொரு மதத்துடன் சண்டை போடுகிறான். ஆனால் இவை அனைத்தும் அறியாமையின் அடிப்படையில் நடக்கின்றது. நான் இந்த உடல் அல்ல. ஆகையினால், சாஸ்திரம் கூறுகிறது, யஸ்யாத்ம-புத்தி꞉ குணபே த்ரி-தாதுகே (ஸ்ரீ.பா. 10.84.13). ஆத்ம-புத்தி꞉ குணபே, இது எலும்பும் மேலும் தசைகளும் நிறைந்த ஒரு பை, மேலும் இது மூன்று தாதுஸ்களால் ஆனது. தாதுஸ் என்றால் உறுப்புகள். ஆயுர்வேதிக் முறைப்படி: கப, பித்த, வாயு. பௌதிக பொருள்கள். ஆகையினால் நான் ஒரு ஆன்மீக ஆத்மா. நான் பகவானின் அங்க உறுப்பு. அஹம்ʼ ப்ரஹ்மாஸ்மி. இதுதான் வேத கல்வி. நீங்கள் இந்த ஜட உலகைச் சேர்ந்தவரல்ல என்பதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஆன்மீக உலகைச் சேர்ந்தவர். நீங்கள் பகவானின் அங்க உறுப்பு."
720801 - சொற்பொழிவு BG 02.11 - க்ளஸ்கொவ்