TA/720814 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நமக்கு இந்த மனித உடல் கிடைத்த பொழுது, அது சும்மா கிருஷ்ணர் உடலின் சாயலாகும். கிருஷ்ணருக்கு இரண்டு கைகள் இருக்கின்றன; நமக்கும் இரண்டு கைகள் இருக்கின்றது. கிருஷ்ணருக்கு இரண்டு கால்கள் இருக்கின்றன; நமக்கும் இரண்டு கால்கள் இருக்கின்றது. ஆனால் இந்த உடலுக்கும் கிருஷ்ணரின் உடலுக்கும் உள்ள வேறுபாடு இந்த பதத்தில் கூறப்பட்டுள்ளது, அங்கானி யஸ்ய ஸகலேந்த்ரிய-வ்ருʼத்தி-மந்தி (ப்ஸ். 5.32). இங்கு, நம் கைகளால், நாம் ஏதோ ஒன்றை பிடிக்கலாம் ஆனால் நடக்க முடியாது. ஆனால் கிருஷ்ணரால் தன்னுடைய கைகளால் நடக்க இயலும். அல்லது நம் கால்களால் நாம் வெறுமனே நடக்க முடியும், ஆனால் ஏதோ ஒன்றை பிடிக்க முடியாது. ஆனால் கிருஷ்ணரால் பிடிக்கவும் முடியும். நம் கண்களால் பார்க்க முடியும், ஆனால் உணவு உண்ண முடியாது. ஆனால் கிருஷ்ணருக்கு கண்களால் பார்க்க முடியும் மேலும் உணவு உண்ண முடியும் மற்றும் கேட்கவும் முடியும். அதுதான் இந்த பதத்தின் விளக்கம். அங்கானி யஸ்ய ஸகலேந்த்ரிய-வ்ருʼத்தி-மந்தி 'ஒவ்வொரு உறுப்புக்கும் மற்ற உறுப்புக்களின் செயல்பாடுகளை செயல்படுத்த முடியும்'. அதைத்தான் பூரணம் என்று அழைக்கின்றோம்."
720814 - சொற்பொழிவு BS 5.32 - லாஸ் ஏஞ்சல்ஸ்