"ஆகவே இந்த போக்கிரிகள், அவர்களுக்கு தெரியவில்லை அதாவது 'எனக்கு அந்த தகுதி இல்லாமல் நான் எவ்வாறு பகவானை காண முடியும்?' இயந்திரம் தவறாக போய்விட்டது, நான் அந்த இயந்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேலும் பொறியாளர், பொறிமுறையாளர், அவரும் அந்த இயந்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் பார்வையும் என் பார்வையும் வேறுபட்டது. அவர் பார்க்க தகுதி பெற்றிருக்கிறார். ஆகையினால் இயந்திரம் தவறாக போய்விட்டால், உடனடியாக அவர் சில பகுதிகளை தொடுகிறார், அது இயங்குகிறது. எனவே ஒரு இயந்திரத்திற்கு அதிக தகுதி தேவைப்படுகிறது என்றால், எந்த தகுதியும் இல்லாமல் எவ்வாறு பகவானை காண்பது? இந்த வேடிக்கையை பாருங்கள். எந்த தகுதியும் இல்லாமல். போக்கிரிகள், அவர்கள் சரியான போக்கிரிகள், சரியான முட்டாள், அதாவது அவர்களுடைய தொல்லை தரும் தகுதியை வைத்துக் கொண்டு பகவானை பார்க்க விரும்புகிறார்கள்."
|