TA/720817 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் இவ்வாறு கூறினால், 'நீங்கள் ஏன் மனித சமூகத்தை காப்பாற்றுவதில் அக்கறை கொள்கிறீர்கள்?' அது கிருஷ்ணரின் வேலை. கிருஷ்ணர் விரும்புகிறார், பகவான் விரும்புகிறார், அதாவது 'இந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், அவர்கள் வீடுபேறு அடைய வேண்டும், இறைவனிடம் செல்ல வேண்டும். அவர்கள் ஏன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?' ஆகையினால் கிருஷ்ணர் தானே நேரடியாக வந்தார்.
பரித்ராணாய ஸாதூனாம்ʼ
விநாஷாய ச துஷ்க்ருʼதாம்
தர்ம-ஸம்ʼஸ்தாபனார்தாய
ஸம்பவாமி யுகே யுகே
(ப.கீ. 4.8)

கிருஷ்ணர் மிகுந்த கவலையுடன் இருக்கிறார். நாம் இங்கு துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம், அழுகிக் கொண்டிருக்கிறோம். நாம் கிருஷ்ணரின் மகன்கள். நாம் இங்கு அழுகிக் கொண்டிருப்பதை கிருஷ்ணர் பார்க்க விரும்பவில்லை. அவர் விரும்புகிறார், 'மீண்டும் வீட்டிற்கு வாருங்கள், என்னுடன் நடனம் ஆடுங்கள், என்னுடன் உணவு உண்ணுங்கள்'. ஆனால் இந்த போக்கிரிகள் போகமாட்டார்கள். அவர்கள் இங்கேயே இணைந்துவிட்டார்கள்: 'இல்லை, ஐயா. இங்கே மிகவும் நன்றாக இருக்கிறது. நான் பன்றியாக மாறுவேன் மேலும் மலம் உண்ணுவேன். அது மிகவும் இனிமையானது'. எனவே இதுதான் நிலைமை."

720817 - சொற்பொழிவு SB 01.02.14 - லாஸ் ஏஞ்சல்ஸ்