TA/720908 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பிட்ஸ்பர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"8,400,000 வகையான வெவ்வேறு உயிரினங்களில் நாகரிகம் அடைந்த மனிதர்களாகிய நாம் மிகவும் குறைவு. ஆனால் ஏனையவை ஏராளமான எண்ணிக்கையில் இருக்கின்றன. எப்படியென்றால் நீரில்: ஜலஜா நவ-லக்ஷாணி (பத்ம புராணம்). நீரில் 900,000 உயிரினங்கள் இருக்கின்றன. ஸ்தாவரா லக்ஷ-விம்ஷதி: 2000,000 உயிரினங்கள் தாவரங்கள் மரங்கள் என தாவர ராஜ்ஜியத்தில் இருக்கின்றன. ஜலஜா நவ-லக்ஷாணி ஸ்தாவரா லக்ஷ-விம்ஷதி, க்ருமயோ ருத்ர-ஸங்க்யய꞉ பூச்சிகள் 1,100,000 வெவ்வேறு இனங்களாக இருக்கின்றன. க்ருமயோ ருத்ர-ஸங்க்யய꞉ பக்ஷீணாம் தஷ-லக்ஷணம்: பறவைகள் 1000,000 உயிரினங்கள். விலங்குகள், பஷவஸ் த்ரிம்ஷ-லக்ஷாணி, நான்கு கால் விலங்கு வகைகள் 3000,000. சதுர்-லக்ஷாணி மானுஷ꞉, மனித இனங்கள் 400,000."
720908 - சொற்பொழிவு BG 02.13 - பிட்ஸ்பர்க்