TA/720920 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
பிரபுபாதர்: கர்மாவிற்கு ஏற்ப, வேறுபட்ட இனங்களின் வாழ்க்கை முறைகள் உள்ளன, ஆனால் அவைகளுக்கு வாழ்வதற்குரிய அனைத்து வசதிகளும் உள்ளன. அதுதான் பகவானின் படைப்பு. மயாத்யக்ஷேண ப்ரக்ருʼதி꞉ ஸூயதே ஸ-சராசரம் (ப.கீ. 9.10). அதற்குரிய இயக்கும் முறை அங்கிருக்கிறது, அதாவது இந்த உயிர்வாழி கடலில் மிகவும் மகிழ்ச்சியுடன் நீந்த ஒரு உடலை விரும்புகிறது, எனவே அவனுக்கு இப்போது மீனின் உடல் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவன் அமைதியாக வாழட்டும். அதுதான் பகவானின் கருணை. நீங்கள் அந்த பலகையில் மிகுந்த ஆனந்தம் கொள்கிறீர்கள்... அதை எப்படி கூறுவீர்கள், கடலில்?
பக்தர்: கடலில் மிதக்கக்கூடிய மரப்பலகை. பிரபுபாதர்: கடலில் மிதக்கக்கூடிய மரப்பலகை? சரியா. (சிரிப்பொலி) எனவே நீங்கள் உங்கள் ஈடுபாட்டை அதிகரித்து கொண்டால்..., "நான் எவ்வாறு இரவு பகலாக நீந்திக் கொண்டு இந்த விளையாட்டை அனுபவித்து கொண்டிருப்பது?" பிறகு கிருஷ்ணர் உனக்கு மீனின் உடலை அளிப்பார். (சிரிப்பொலி) ஆம். அவர் மிகவும் கருணையானவர். மேலும் நீங்கள் அழகாக கடலில் வாழ்வீர்கள், எவ்விதமான கஷ்டமும் இல்லாமல் எப்பொழுதும் நீந்திக் கொண்டு இருப்பீர்கள். அனைத்து பிறவியிலும். நிங்கள் ஒரு குறிப்பிட்ட செயலில் உங்கள் நாட்டத்தை அதிகப்படுத்திக் கொண்டால், இயற்கை தயாராக உடனடியாக : 'இந்த உடலை எடுத்துக் கொள். நீ ஏன் கவலையுடன் இருக்கிறாய்? இந்த உடலை எடுத்துக் கொள்'. அதேபோல், கிருஷ்ணர் உடலைப் போல் கிடைக்க கவலையுடன் இருந்தால், அதுவும் தயாராக இருக்கிறது. இப்போது அது உங்கள் தேர்வு." |
720920 - சொற்பொழிவு SB 01.03.15 - லாஸ் ஏஞ்சல்ஸ் |