"இந்த பௌதிக படைப்பிற்கு அவசியமே இல்லை. சில போக்கிரிகள் கேள்வி கேட்கிறார்கள் அதாவது 'பகவான் ஏன் இந்த பரிதாபகரமான உலகை படைத்தார்?' ஆனால் நீங்கள் விரும்பினீர்கள்; ஆகையினால் பகவான் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். யே யதா மாம்ʼ ப்ரபத்யந்தே தாம்ʼஸ் ததைவ பஜாம்ய் அஹம் (ப.கீ 4.11). கிருஷ்ணர் கூறுகிறார். கிருஷ்ணர் மிகவும் அன்பானவர். நீங்கள் அவ்விதமான பொருளை விரும்பினீர்கள். அதே உதாரணம், சிறைச்சாலை. சிறைச்சாலையை, அரசாங்கம் பிரச்சாரம் செய்யவில்லை, 'தயவுசெய்து, அனைத்து பெண்கள் மற்றும் அன்பர்களே, இங்கு வாருங்கள்'. இல்லை. நீங்கள் போகிறீர்கள். நீங்கள் போகிறீர்கள். அதேபோல், இந்த பௌதிக உலகம் உங்களுக்காக படைக்கப்பட்டது, ஏனென்றால் நீங்கள் அதை விரும்பினீர்கள். மேலும் இங்கு நீங்கள் எதிர்பார்க்க முடியாது..., சிறைச்சாலையில் மிகவும் வசதியாக வாழ எதிர்பார்க்க முடியாது... ஏனென்றால் அது வெறும் சிறைச்சாலை. அங்கு இன்னல்கள் இருக்க வேண்டும் அப்பொழுது தான் நீங்கள் மீண்டும் வரமாட்டீர்கள்."
|