TA/721023 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இது ஒருவர் எவ்வாறு கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறியாகும். எவ்வாறென்றால் அனைத்து நல்ல குணங்களும் அவருடைய குணவியலில் வெளிப்படும். அது நடைமுறை. யாரேனும் சோதிக்கலாம். எவ்வாறென்றால் இந்த சிறுவர்கள், இந்த பெண்கள், ஐரோப்பியர், அமெரிக்க சிறுவர்கள் மேலும் பெண்கள் இந்த கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொண்டவர்கள், சும்மா பாருங்கள் அவர்களுடைய தவறான பழக்கங்கள் எவ்வாறு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது என்று. ஸர்வைர் குணைஸ் தத்ர ஸமாஸதே ஸுரா꞉. அனைத்து நல்ல குணங்களும் உருவாகும். நீங்கள் நடைமுறையில் பாருங்கள். நீங்கள் நடைமுறையில் பாருங்கள். இந்த இளம் சிறுவர்கள் மேலும் பெண்கள், அவர்கள் என்னிடம் கேட்டதே இல்லை அதாவது 'எனக்கு கொஞ்சம் பணம் கொடுங்கள். நான் சினிமாவிற்கு போக வேண்டும்', அல்லது 'நான் சிகரெட் வாங்க வேண்டும். நான் மது அருந்த வேண்டும்'. இல்லை. இது நடைமுறை. எல்லோருக்கும் தெரியும், அதாவது அவர்கள் பிறந்த நாளில் இருந்து, மாமிசம் உண்பதில் பழக்கப்பட்டவர்கள் என்று, மேலும்... அவர்கள் ஆரம்பத்திலிருந்து போதைப் பொருளில் பழக்கப்பட்டவர்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் உண்மையில் இந்த பொருள்களில் பழக்கப்பட்டிருந்தனர், ஆனால் அவர்கள் மொத்தத்தில் அனைத்தையும் விட்டுவிட்டனர். அவர்கள் தேநீர், காப்பி கூட குடிப்பதில்லை, சிகரெட் எதுவும் இல்லை. ஸர்வைர் குணைஸ் தத்ர ஸமாஸதே... இதுதான் சோதனை. ஒரு மனிதன் பக்தனாகிவிட்டான், ஆதே நேரத்தில் புகைப்பிடிக்கிறான்—இது கேலிக்குரியது. இது கேலிக்குரியது."
721023 - சொற்பொழிவு SB 01.02.12 - விருந்தாவனம்