TA/721024 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அதிகரித்து வரும் அன்பு நிறைந்த இயற்கையான மனப்பாங்கு முழு முதற் கடவுளை சென்று அடைந்தால் அல்லாது அது நிறைவு பெறாது. அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். நாம் நேசிக்கிறோம். அன்பு நிறைந்த இயற்கையான மனப்பாங்கு அங்கு இருக்கிறது. நமக்கு குடும்பம் இல்லையென்றாலும், நாம் சில நேரங்களில் அன்பு செலுத்த செல்லப் பிராணிகள் வைத்திருப்போம், பூனையும் நாயும். எனவே இயற்கையில், நாம் மற்றவர்களை நேசிக்க பழகப்பட்டுள்ளோம். எனவே அந்த மற்றவர் கிருஷ்ணர் ஆவார். உண்மையில், நாம் கிருஷ்ணரை நேசிக்க விரும்புகின்றோம், ஆனால் கிருஷ்ணரைப் பற்றிய தகவல் இல்லாமல், கிருஷ்ண உணர்வு இல்லாமல், நம் அன்பு நிறைந்த இயற்கையான மனப்பாங்கு ஒரு வட்டத்தினுள் வரையறுக்கப்பட்டுவிட்டது. ஆகையினால் நாம் திருப்தி அடையவில்லை. நித்ய-ஸித்த க்ருʼஷ்ண-பக்தி (சி.சி. மத்ய 22.107). அந்த காதல் விவகாரம், அன்பு நிறைந்த இயற்கையான மனப்பாங்கு, கிருஷ்ணரை நேசிக்க அது நித்தியமாக இருக்கிறது."
721024 - சொற்பொழிவு NOD - விருந்தாவனம்