TA/721026 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் வெறுமனே உங்கள் கண்களால் கிருஷ்ணரை பாருங்கள், பிறகு உங்கள் கணகள் தூய்மையடையும் மேலும் ஆன்மீக தன்மை பெறும். ஏனென்றால் நீங்கள் தொட்டுக் கொண்டிருக்கிறீர்கள்... எவ்வாறென்றால் நீங்கள் எப்பொழுதும் நெருப்பை நெருங்கிக் கொண்டிருந்தால், நீங்கள் வெப்பத்தை உணர்வீர்கள். வெப்பம், அதிக வெப்பம், அதிக வெப்பம். நீங்கள் ஒரு இரும்பு கம்பியை நெருப்பில் போட்டால், அது வெப்பம், அதிக வெப்பம், அதிக வெப்பம், மேலும் கடைசியாக, அது சிவப்பாக சூடாகும். அது சிவப்பாக சூடாகும் போது, அது நெருப்பு; அது இரும்பு கம்பியல்ல. அந்த சிவப்பு இரும்பு கம்பியை எங்கு தொட்டாலும், அது சுட்டுவிடும். அதேபோல், நீங்கள் எப்பொழுதும் கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டிருந்தால், நீங்கள் கிருஷ்ணராகிவிடுவீர்கள்..., க்ருʼஷ்ணைஸ் ஆவீர்கள், மேலும் உங்களால் கிருஷ்ணரை பாராட்ட முடியும்."
721026 - சொற்பொழிவு NOD - விருந்தாவனம்