"ஒரு பக்தர், அவர் சைதன்ய மஹாபிரபுவிடம் வேண்டிக் கொண்டார், 'என் தெய்வமே, தாங்கள் வந்திருக்கிறீர்கள். தயவுசெய்து இந்த பிரபஞ்சத்தின் அனைத்து மக்களுக்கும் முக்தி அளியுங்கள், மேலும் அவர்கள் பாவம் நிறைந்தவர்களாக இருந்தால், அனைத்து பாவங்களையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன், ஆனால் அவர்கள் முக்தி பெறட்டும்'. இதுதான் வைஷ்ணவ தத்துவம். 'மற்றவர்கள் பகவானின் கருணையால் முக்தி பெறலாம்; நான் நரகத்தில் அழுகிப் போகிலாம். அதனால் பரவாயில்லை'. 'முதலில் நான் சொர்க்கத்திற்குச் செல்கிறேன், மேலும் மற்றவர்கள் அழுகிப் போகலாம்', என்றல்ல. இது வைஷ்ணவ தத்துவமல்ல. வைஷ்ணவ தத்துவம் என்றால், 'நான் நரகத்தில் அழுகிப் போகிலாம், ஆனால் மற்றவர்கள் முக்தி பெறலாம்'. அதிதானாம்ʼ பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ நமோ நம꞉ (மங்கலாசரண 9). வைஷ்ணவ என்பவர்கள் வீழ்ந்த ஆன்மாக்கள் அனைவருக்கும் விடுதலை அளிப்பதற்கானவர்கள்."
|