"குழந்தை வலியுறுத்துகிறது: 'அப்பா, எனக்கு இது வேண்டும்'. தந்தை கூறுகிறார், 'இல்லை, நீ அதை எடுக்காதே'. 'நான் அதை தொடுவேன். நான் நெருப்பைத் தொடுவேன்'. தந்தை கூறுகிறார், 'இல்லை, அதை தொடாதே'. ஆனால் அவன் வலியுறுத்தி மேலும் அழுகின்றான், எனவே தந்தை கூறுகிறார், 'சரி, நீ தொடு'. அதேபோல், நாமே நம் அதிர்ஷ்டத்தையும் மேலும் துரதிர்ஷ்டத்தையும் உருவாக்கி கொள்கின்றோம். யே யதா மாம்ʼ ப்ரபத்யந்தே தாம்ʼஸ் ததைவ பஜாம்ய் அஹம் (ப.கீ. 4.11). ஆக தந்தை நாம் ஏதோ ஒன்றை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் நாம் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக ஏதோ ஒன்றை செய்ய விரும்புகின்றோம். அதேபோல், கிருஷ்ணர், நாம் அனைவரும் அவரிடம் சரணடைந்து மேலும் அவருடைய வழிகாட்டுதல்படி செயல்புரிய வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் நாம் அவர் விருப்பத்திற்கு எதிராக செயல்புரிய விரும்புகின்றோம். ஆகையினால் நாமே நம் அதிர்ஷ்டத்தையும் மேலும் துரதிர்ஷ்டத்தையும் உருவாக்கிக் கொள்கின்றோம். அதுதான் முறை."
|