TA/721129 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹைதராபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நவீன நாகரீகம் என்பது நாம் எவ்வாறு நன்றாக சாப்பிடலாம், நாம் எவ்வாறு நன்றாக தூங்கலாம், நாம் எவ்வாறு நன்றாக பாலியல் உறவு கொள்ளலாம், நாம் எவ்வாறு நன்றாக பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதுதான். இந்த நான்கு கொள்கைகள் மட்டும்தான் கற்பிக்கப்படுகிறது. ஆன்மா என்பது என்ன, பகவான் என்றால் என்ன, ஆன்மாவுடன் ஆன உறவு என்ன என்ற யோசனை அவர்களுக்கு இல்லை. ஆக இதுதான், இம்மாதிரியான நாகரீகம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே கற்பனை செய்து பாருங்கள் நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு பிறகு, அது எவ்வளவுக்கு அதிகரிக்கும் என்று. கலியுகம் ஆரம்பித்து ஐயாயிரம் ஆண்டுகள் தான் ஆகிறது. இந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்குள், நாம் அதிகமாக தாழ்ந்துவிட்டோம், மாயாவின் மாயாவால் முன்னேற்றம் அடைந்த நாகரீகமாக. இதுதான் மாயா. எனவே பல நாட்கள் போகப் போக, நாம் அதிகமாக மாயையில் இருப்போம். ஆகவே பகவானை புரிந்துக் கொள்ளும் திறன் இருக்காது. அந்த நேரத்தில், இந்த மக்கள் தொகையை, அவர்களுடைய தொண்டையை வெட்டி அழிக்க பகவான் வருவார். அதுதான் கல்கி-அவதார."
721129 - சொற்பொழிவு BG 02.25 - ஹைதராபாத்