TA/721205 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் அகமதாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தற்போதைய தருணத்தில், மேசைகள் மற்றும் நாற்காலிகளில் சாப்பிடுவதால், முன்னேறுகிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது நம் தவறு. அது முன்னேற்றம் ஆகாது. சாப்பிடுவது... சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை, நாமோ விலங்கோ எதை சாப்பிட்டாலும் அது ஒன்றே. உணவு என்பது உடலையும் ஆன்மாவையும் ஒன்றாக பராமரிப்பதாகும். எனவே உண்ணும் முறைகளில் முன்னேறுவது, நாகரிகத்தின் முன்னேற்றம் ஆகாது. தூக்க முறைகளில் முன்னேற்றம், அதுவும் நாகரிகத்தின் முன்னேற்றம் ஆகாது. அதுபோல, உடலுறவு முறைகளில் முன்னேற்றம், நாகரிகத்தின் முன்னேற்றம் ஆகாது. பாதுகாப்புத் துறையில் முன்னேற்றமோ எதிரியைக் கொல்வதற்கான அணுகுண்டுகளைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றமோ, அதுவும் நாகரிகத்தின் முன்னேற்றம் அல்ல. நாகரிகத்தின் முன்னேற்றம் என்பது ஆத்மாவையும் ஆன்மாவின் இறுதி இலக்கையும், ஆன்மா ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு எவ்வாறு மாறுகிறது என்பதையும் அறிந்து கொள்ளவதில் நாம் காட்டும் முன்னேற்றத்தையே குறிக்கும்.

"

721205 - சொற்பொழிவு Rotary Club - அகமதாபாத்