"நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்தால், பிறகு நாம் அவருடைய பிரதிபலிப்பாவோம். நாம் பிரதிபலிப்பாவோம். கிருஷ்ணர் திருப்தி அடைவார், உடனடியாக நாம் திருப்தி அடைவோம். எனவே நீங்கள் அமைதியையும், திருப்தியையும் விரும்பினால், கிருஷ்ணரை திருப்தி படுத்துங்கள். அதுதான் முறை. உங்களால் முடியாது... எவ்வாறு என்றால் கண்ணாடியில் தெரியும் பிரதிபலிப்பை அலங்கரிப்பது போல்— அது சாத்தியம் அல்ல. நீங்கள் யதார்த்ததை, நபரை அலங்கரிக்க வேண்டும், மேலும் கண்ணாடியில் தெரியும் பிரதிபலிப்பு அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதுதன் செயல்முறை. உங்கள் அலங்காரத்திற்காக, சுவையான உணவிற்காக, கிருஷ்ணர் ஏங்கிக் கொண்டிருக்கவில்லை, ஏனென்றால் அவர் முழு நிறைவுடன் இருக்கிறார், ஆத்மாராம. அவரால் எம்மாதிரியான வசதிகளையும் உருவாக்க முடியும், அவர் மிகவும் சக்தி படைத்தவர். ஆனால் அவர் மிகுந்த கருணையுடையவர் அதாவது, நீங்கள் அவருக்கு சேவை செய்யக் கூடிய ஒரு உருவத்தில் உங்களிடம் வருகிறார்: இந்த அர்சா-மூர்தி. கிருஷ்ணர் மிகவும் கருணையானவர். ஏனென்றால் உங்களால் தற்போதைய தருணத்தில் ஆன்மீக அடையாளத்தில் இருக்கும் கிருஷ்ணரை பார்க்க முடியாது, ஆகையினால் அவர் உங்கள் முன் ஒரு கல்லாக, மரக்கட்டையாக வந்திருக்கிறார். ஆனால் அவர் கல் அல்ல; அவர் மரக்கட்டை அல்ல."
|