"1966-ல் நான் அமெரிக்காவில் இருந்த பொழுது, ஒரு அமெரிக்க மாது அவர் படிப்பதற்கு, என்னிடம் பகவத் கீதை ஆங்கில பதிப்பை பரிந்துரைக்கச் சொன்னார். ஆனால் உண்மையில் அதன் விசித்திரமான விளக்கத்தால் என்னால் எதையும் அவரிடம் பரிந்துரைக்க முடியவில்லை. அது எனக்கு, பகவத் கீதை உண்மையுருவில் எழுதுவதிற்கு உத்வேகம் அளித்தது. மேலும் இந்த தற்போதைய பதிப்பு பகவத் கீதை உண்மையுருவில், மெக்மில்லன் நிறுவனத்தால், வெளியிடப்பட்டது, உலகிலேயே மிகப் பெரிய பதிப்பகத்தார். மேலும் நாம் சிறப்பாக செயல்படுகிறோம். நாம் இந்த பகவத் கீதை உண்மையுருவில் 1968 வெளியிட்டோம், சிறிய பதிப்பு. அது மிகவும் சிறப்பாக விற்பனையானது. மெக்மில்லன் நிறுவனத்தின் வர்த்தக மேலாளர் தெரிவித்தார், அதாவது நம் புத்தகம் மேலும், மேலும் அதிகமாக விற்பனையாகிறது; மற்றவை குறைந்துக் கொண்டிருக்கிறது. பிறகு சமீபத்தில், 1972-ல் , நாம் பகவத் கீதை உண்மையுருவில் முழுமையான பதிப்பை வெளியிட்டோம்."
|