TA/730225 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஜகார்த்தா இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"லாஸ் ஏஞ்சலீஸில் கடலிலிருந்து சற்றேரக்குறைய மூன்றடி தூரத்தில் நடந்துகொண்டிருந்தேன். "என் மாணவர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தேன், “தற்சமயம் நான் கடலிலிருந்து மூன்றடி தூரத்தில் இருக்கிறேன், கடல் மிகவும் பரந்தது. எந்த நொடியிலும் நம்மை மூழ்கடிக்கக்கூடியது. ஆனால் கடல் இங்கு வராது என எப்படி நம்பிக்கையுடன் இருக்கிறாய்? எப்படி என்றால், கடவுளின் ஆணைப்படி, கடல் மிகவும் பெரிது என்றாலும் கடவுளின் ஆணையை அது மீற முடியாது. நீ பெரிது என்பது சரிதான். இருப்பினும் இந்த கோட்டைத் தாண்டி வரக்கூடாது. ஆக இவை எல்லாவற்றின் மீதும் மேலாண்மை நடந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் கடவுள் இல்லை? என்ன ஒரு முட்டாள்தனம். விஷயம் என்னவென்றால்... ஒரு வீட்டை கடந்து செல்கையில், சில சமயங்களில் நீங்கள் பார்கவில்லை என்றால்..., வீடு சரியாக பராமரிக்கப்படவில்லை, அல்லது வீட்டின் முன் விளக்கில்லை, குப்பையாக குவிந்திருக்கிறது உடனே நாம் சொல்லுவோம். ‘ஓ இந்த வீட்டில் ஆள் யாரும் இல்லை’. ஆனால் வீட்டை மிகவும் அருமையாக வைத்திருந்தால், வீட்டில் விளக்கு வைத்து தோட்டமும் இருந்தால், ஆளிருக்கிறார் என புரிந்துகொள்ளுவோம். இது பொது அறிவு. விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்றால், எல்லாம் மிகவும் நேர்த்தியாக நடக்கிறது, நிர்வாகம் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும், மூளை இல்லை? நீங்கள் எப்படி சொல்ல முடியும்? என்ன ஒரு முட்டாள்தனம்? ஹூ? கடவுள் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்?"
730225 - உரையாடல் - ஜகார்த்தா