TA/730412 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே ஆரம்பத்தில், நீங்கள் கிருஷ்ண உணர்வை தொடங்கியதும், மாயையால் பல இடையூறுகள் ஏற்படும். நீங்கள் எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கிறீர்கள் என்பதை மாயா சோதிப்பாள். அவள் உஙகளை சோதிப்பாள். அவளும் கிருஷ்ணரின் சேவகியே. கிருஷ்ணாவுக்கு இடையூறு விளைவிக்கும் எவரையும் அவள் அனுமதிப்பதில்லை. ஆகையால், அவள் மிகவும் கடுமையாக சோதிக்கிறாள் நீங்கள்.... நீங்கள் கிருஷ்ணரை தொந்தரவு செய்ய கிருஷ்ண உணர்வை பயிலுகிறீர்களா, அல்லது நீங்கள் உண்மையிலேயே தீவிரமாக இருக்கிறீர்களா என்று. அதுவே மாயாவின் தொழில். எனவே ஆரம்பத்தில் மாயாவின் சோதனை இருக்கும், மேலும் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் அடைவதில் நீங்கள் அதிக இடையூறுகளை உணருவீர்கள். ஆனால் நீங்கள் நிலையாக இருந்தால்... நிலையாக என்றால் நீங்கள் விதிகள் மற்றும் நியமங்களை பின்பற்றி பதினாறு மாலை ஜபம் செய்தால், நீங்கள் உறுதியாக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் புறக்கணித்தால், உடனடியாக மாயா உங்களைப் பிடித்துக்கொள்வார். மாயா எப்போதும் தயாராக இருக்கிறார். நாம் கடலில் இருக்கிறோம். எந்த நேரத்திலும் நாம் தொல்லைக்கு ஆட்படுவோம். எனவே, தொல்லைகளுக்கு ஆட்படாத ஒருவர் பரமஹம்சா என்று அழைக்கப்படுகிறார்"
730412 - சொற்பொழிவு SB 01.08.20 - நியூயார்க்