"பொறாமையும் மேலும் போட்டியும் பொறாமையும் உள்ளவர்கள, இந்த பௌதிக உலகில் தான் இருக்கிறார்கள். மற்றும் பொறாமை கொள்ளாதவர்கள், ஆன்மீக உலகில் இருக்கிறார்கள். எளிய விஷயம். நீங்களே சொந்தமாக சோதித்துக் கொள்ளலாம், 'நான் என்னுடன் இணைந்தவர்கள், நண்பர்கள், அனைவரின் மீதும் போட்டியும் பொறாமையும் கொள்கிறேனா?' அவ்வாறென்றால் நான் பௌதிக உலகில் இருக்கிறேன். மேலும் நான் பொறாமை கொள்ளவில்லை என்றால், நான் ஆன்மீக உலகில் இருக்கிறேன். யாரேனும் சோதித்துக் கொள்ளலாம். நான் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றேனா இல்லையா என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்கள் தானே சோதித்துக் கொள்ளலாம். பக்தி꞉ பரேஷானுபவோ விரக்திர் அன்யத்ர ஸ்யாத் (ஸ்ரீ.பா. 11.2.42). எவ்வாறென்றால் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் திருப்தி அடைந்துவிட்டீர்களா, உங்கள் பசி திருப்தி அடைந்துவிட்டதா என்று நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். நீங்கள் மற்றவர்களிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டியதில்லை. அதேபோல், நீங்கள் பொறாமையும் மேலும் போட்டியும் பொறாமையும் உள்ளவரா என்று தானே சோதித்துக் கொண்டு அவ்வாறாயின், நீங்கள் பௌதிக உலகில் இருக்கிறீர்கள். மேலும் நீங்கள் பொறாமை, போட்டியும் பொறாமையும் கொள்ளவில்லை என்றால், நீங்கள் ஆன்மீக உலகில் இருக்கிறீர்கள். அதன் பிறகு நீங்கள் கிருஷ்ணருக்கு நன்றாக சேவை செய்யலாம்."
|