TA/730504 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
பிரபுபாதர்: லோமஷ முனி, அவருடைய வாழ்க்கை காலம் எவ்வாறென்றால், ஒரு ப்ரஹ்மா மரணம் அடையும் பொழுது, உடலில் இருந்து ஒரு முடி உதிர்ந்துவிடும். எனவே இவ்விதமாக, அவருடைய உடலில் உள்ள அனைத்து முடியும் உதிர்ந்ததும், அவர் மரணம் அடைந்துவிடுவார். அவருக்கு இத்தகைய மிக நீண்ட... எனவே அவர் கடற்கரையின் ஒரு பக்கத்தில் நின்றுக் கொண்டு ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்துக் கொண்டிருந்தார். எனவே நாரதர் முனி அவரை அணுகினார், 'நீங்கள் ஏன் இங்கு ஒரு சிறிய குடிசை கட்டிக் கொள்ளக் கூடாது?' அவர் கூறினார், 'நான் எவ்வளவு காலம் வாழப் போகிறன்? (சிரிப்பொலி) ஐயே, நின்றுக் கொண்டிருப்பது போதுமானது. என் வேலையை முடிக்கவிடுங்கள்...' சும்மா பாருங்கள். இங்கு அவர்கள் இருபது வருடங்கள் வாழ்வார்கள், மேலும் வானளாவிய கட்டிடங்கள் கட்டுகிறார்கள் (சத்தம் செய்கிறார்) 'டொக்-டொங், டொக்-டொங், டொக்-டொங்'. (சிரிப்பொலி) 'நான் இருபது அல்லது முப்பது வருடங்கள் வாழ்வேன்' என்று கணக்கிடுவதில்லை.
ஸ்வரூப தாமோதர: அதுவும் உத்தரவாதம் இல்லை. பிரபுபாதர்: அதுவும் உத்தரவாதம் இல்லை. நான் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறேன்? அவர்கள் மிகவும் முட்டாள் நபர்கள். |
730504 - காலை உலா - லாஸ் ஏஞ்சல்ஸ் |