" நாம் அவருடன் ஒத்துழைத்தால், கிருஷ்ணா என்ன விரும்புகிறாரோ, நாம் சிறிதாக செய்ய விரும்பினால், உடனடியாக கிருஷ்ணா உங்களுக்கு உதவுவார். நீங்கள் ஒரு சதவிகிதம் வேலை செய்தால், கிருஷ்ணா உங்களுக்கு பத்து சதவிகிதம் உதவுவார். மறுபடி நீங்கள் ஒரு சதவிகிதம் வேலை செய்தால், கிருஷ்ணா உங்களுக்கு மேலுமொரு பத்து சதவிகிதம் உதவுவார். ஆனால் நூறு சதவிகிதம் உங்களுக்கு வரவு. கிருஷ்ணாவின் உதவியால். கிருஷ்ணா உஙகளுக்கு புத்திசாலிசனத்தை அளிக்கிறார். தேஷாம் ஸதத யுக்தானாம் பஜதான் ப்ரீதி-பூர்வகம், புத்தி யோகம் ததாமி தம் (BG 10.10). நீங்கள் ஸததம் ஈடுபட்டிருந்தால், இருபத்து நான்கு மணிநேரமும், வேறு எதிலும் ஈடுபடாமல், சர்வ-தர்மான் பரித்யஜ்ய (BG 18.66), மற்ற அனைத்து முட்டாள்தனமான காரியங்களையும் விடுத்து..சர்வ தர்மான். எளிதாக கிருஷ்ணரின் சேவையில் ஈடுபட்டால், ப்ரீதி பூர்வகம், அன்புடன். சலிப்புடன் அல்லாது: ஆஹா இதோ ஒரு கடமை, ஹரே கிருஷ்ணா ஜபம். சரி ’ஹரேகிருஷ்ணஹரேகிருஷ்ணஹரேகிருஷ்ண...’ (மிக வேகமான ஜபம் செய்கிறார், தெளிவில்லாது) இப்படி அல்ல. ப்ரீதியுடன், அன்புடன். ஒவ்வொரு பெயரையும் ஜபிக்கவும், ‘ஹரே கிருஷ்ண, அதனை கேட்கவும். இதோ கிருஷ்ணா, இதோ ராதாராணி. இதைப் போன்ற தரமான ஜபம். ’ஹரேகிருஷ்ணஹரேகிருஷ்ணஹரேகிருஷ்ண...இதைப் போல அல்லாமல், இதைப் போல அல்லாமல், அன்புடன்”
|