TA/730710 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பெளதிக உலகம் என்றால் இந்த ஐந்து பொருட்கள் ஸ்தூல மற்றும் சூட்சும. பூமி, நீர், அக்னி, நெருப்பு, அகாயம் இவை ஸ்தூல பொருட்கள். மேலும் மனம், புத்தி மற்றும் அகங்காரம் இவை சூட்சுமமானது. இந்தப் பொருட்கள் பெளதிக பொருட்கள், கிருஷ்ணா சொல்கிறார் பிண்ண மே ப்ரகிருதிர் அஷ்டதா (BG 7.4): ‘இந்த பெளதிக பொருட்கள், இவை பிரிந்து போனவை, ஆனாலும் இவை என் சக்தியே. இவை என் சக்தியே’. இதே போன்ற உதாரணம்: மேங்களைப் போல. மேகங்கள் சூரியனால் உருவானவை. சூரியனின் சக்தி மேகங்களை உருவாக்குகிறது. உங்களுக்கு தெரியும். வெட்பத்தால் கடல் நீர் ஆவியாகி வாயுவாக மாறுகிறது. இதுவே மேகம். எனவே மேங்கள் சூரியனின் சக்தியால் உருவாகிறது ஆனால் மேகமிருந்தால் சூரியனை உங்களால் காண இயலாது, சூரியன் மறைக்கப்படும். இது போலவே, பெளதிக சக்தி கிருஷ்ணருடைய சக்தி. ஆனால் நீங்கள் இந்த பெளதிக சக்தியினால் மறைக்கப் படும் போது உங்களால் கிருஷ்ணரை காண் முடியாது. இதுவே நிலை."
730710 - சொற்பொழிவு BG 01.04-5 - இலண்டன்