TA/730719 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணா எல்லையற்றவர். நீங்கள் கிருஷ்ணருடன் அவரது ராசலீலை நடனத்தில் கோபிகைகளாக சேரும்போது, அல்லது ஆயர் சிறுவர்களாக, அவருடன் விளையாட, அல்லது அவருடைய தந்தையாக மற்றும் தாயாக ஆகி, யசோதை, நந்த மகாராஜா, யசோதை-ராணி, அல்லது அவருடைய..., சேவர்களாக ஆகி, அல்லது தண்ணீராகவாவது, யமுனா, அல்லது விருந்தாவனத்தில் நிலமாக மேலும் மரங்கள் அல்லது கணிகள், அல்லது மலர்கள், எப்படியாவது, அல்லது பசுக்கள் மற்றும் கன்றுகள்.... கிருஷ்ணருடன் சேருங்கள். பின்னர் நீங்கள் ஆனந்தத்தை பெறுவீர்கள், உண்மையான ஆனந்தம். ஆனந்தமயோ அப்யாசாத் (வேதாந்த-சூத்ரா 1.1.12). சத்-சித்-ஆனந்த-விக்ரஹா (பி.சம். 5.1). அதுவே பாகவதம் முழுவதும் உள்ள வர்ணனை, கிருஷ்ணரது சகாக்கள் எப்படி வாழ்க்கையை அனுபகிக்கிறார்கள். க்ருத-புண்ய-புஞ்சாஹா (SB 10.12.11). சுகதேவ கோஸ்வாமி கூறினார்,’கிருஷ்ணருடன் விளையாடுமி இந்த சிறுவர்கள், ஓ, அவர்கள் சாதாரண சிறுவர்கள் அல்ல’. க்ருத-புண்ய-புஞ்சாஹா: 'அவர்கள் மில்லியன் மற்றும் டிரில்லியன் கணக்கான பிறப்புகளுக்கான பக்தியுள்ள நடவடிக்கைகளின் விளைவுகளை குவித்துள்ளனர். தற்போது கிருஷ்ணருடன் விளையாட வந்துள்ளனர். எனவே பக்தி-யோகத்தில் அதற்கான வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணர் உன்னை திரும்ப அழைத்துச் செல்ல ஆவலுடன் உள்ளார். ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள், பொருளாதார வளர்ச்சி?"
730719 - சொற்பொழிவு BG 01.23 - இலண்டன்