"ஸ்திரி என்றால் விரிவடைவது. விஸ்தார, விரிவடைவது. நான் தனியாக இருக்கிறேன். மனைவியை, ஸ்திரியை ஏற்றுக்கொள்கிறேன், அவளுடைய ஒத்துழைப்புடன் நான் விரிவடைகிறேன். எனவே விரிவடைய உதவுவது ஸ்திரி எனப்படுகிறது. ஒவ்வொரு சமஸ்கிருத வார்த்தைக்கும் அர்த்தம் உண்டு. ஏன் பெண் ஆனவள் ஸ்திரி எனப்படுகிறாள்? ஏனென்றால் அவள் எனக்கு விரிவடைய உதவுகிறாள். எப்படி விரிவடைகிறேன்? தேஹாபத்ய-களத்ராதிஷு (SB 2.1.4). குழந்தைகளை பெற்றுக் கொள்கிறேன். முதலில் நான் எனது உடல் மீது பாசம் வைத்திருந்தேன். பிறகு எனக்கு ஒரு மனைவி கிடைத்தவுடன், அவள் மீது பாசம் கொள்கிறேன். பிறகு எனக்கு குழந்தைகள் கிடைத்தவுடன், குழந்தைகள் மீது பாசம் கொள்கிறேன். இவ்வாறாக நான் பௌதிக உலகின் மீதான எனது பாசத்தை விரிவடையச் செய்து கொள்கிறேன். இந்த ஜட உலகம், பற்று. இது தேவையில்லை. அது அந்நிய விஷயம். இந்த ஜட உடல் அந்நியமானது. நான் ஆன்மீகமானவன். நான் ஆன்மீகமானவன், அஹம் ப்ரஹ்மாஸ்மி. இந்த பௌதிக உலகை அடக்கியாள விரும்பியதால், கிருஷ்ணர் ஜட உடலை நமக்கு அளித்துள்ளார். தைவ-நேத்ரேண (SB 3.31.1). அவர் உடலை அளிக்கிறார். நமது ஆசைக்கேற்ப பிரம்மாவின் உடலை அளிக்கிறார், எறும்பின் உடலை அளிக்கிறார்."
|